Kovaikai :
Kovaikai :

Kovaikai : 

வேண்டாம் என்று ஒதுக்கும்,கோவைக்காயில் இவ்வளவு நன்மைகளா? தெரியுமா உங்களுக்கு?…

நன்மை தரும் கோவைக்காய்:

சாலையோரங்களில் கொடியாகப் படர்ந்து இருக்கும் கோவைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது கோவைக்காயின் முழுத்தாவரமும் இனிப்பு சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் பயனுள்ள மூலிகையாக கோவைக்காய் விளங்குகின்றது.

மருத்துவ பலன்கள்:

☆ கோவைக்காய் ஓர் அற்புதமான ‘ஆன்டிபயாடிக்’ என்று சொல்லப்படும் நோய் போக்கி ஆகும்.

☆ தாய்ப்பால் பற்றாத இளம் தாய்மார்கள், கோவைக்காயை உண்ண
பால் சுரக்க செய்யும்.

☆ கோழையைக் கரைத்து வெளியேற்றும் வல்லமை உடையது.

☆ தோலில் உண்டாகும் அரிப்பு, கொப்புளங்கள், வேர்க்குரு, வெடிப்புகள் விலகிப்போக உன்னதமான மருந்தாக கோவைஇலை உபயோகப்படுகின்றது.

☆ கோவைக்காயை வாயிலிட்டு மென்று உண்பதால் வாய்ப்புண் விரைவில் ஆறும். நாக்கு அச்சரம் அகலும். பற்களில் இருந்து ரத்தம் கசிதல், சீழ்பிடித்தல், பல் கூச்சம், பல் ஆட்டம் ஆகியவை குணமாகும்.

☆ கோவை இலைச் சாற்றை, விஷக்கடிகளுக்கு பூசலாம் என்றும், கோவைஇலை உஷ்ணத்தையும், வியர்வையையும் உண்டாக்கும் தன்மையுடையது என்றும், ஆறாத புண்கள் சொறி சிரங்கு இருமல் இவற்றைப் போக்கும் .

☆ கோவை இலையை மைய அரைத்து, அதனுடன் வெண்ணெய் சேர்த்து, குழைத்து அடிபட்ட காயங்கள், தோல் நோய்கள் ஆகியவற்றின் மேல் பூச விரைவில் ஆறிவிடும்.

☆ சில கோவை இலைகளை நீரிலிட்டு, கொதிக்க வைத்து, ஆற வைத்து, நாட்பட்ட ஆறாத புண்கள், நச்சு நீர் வடிந்து நமைச்சலுடன் நாற்றம் வீசும் புண்கள் ஆகியவற்றின் மீது கழுவிவர விரைவில் ஆறிவிடும்.

☆ கோவையின் பழங்கள், இலைகள், வேர்கள் அனைத்தும் சர்க்கரை நோயை தணிக்கும் தன்மையுடையது.

☆ கோவையின் பூக்கள், மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகிறது. கோவைக்காய் நுரையீரல் கோளாறுகளையும், சுவாசப்பாதை சளியையும் போக்க பயன்படுகிறது.

☆ இலை பழங்கள், காய்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here