Kovai Sarala Speech
Kovai Sarala Speech

Kovai Sarala Speech – சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய குமரவேல் – க்கு பதிலடி தரும் வகையில் நான் என்ன முட்டாளா.. எனக்கு அரசியல் தெரியாதா? என்று கோவை சரளா கேள்வி எழுப்பி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஒரே நாளில் மூன்று நிர்வாகிகள் நேற்று விலகி இருக்கிறார்கள். இதனால் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பேசப்பட்டது சி.கே. குமரவேல் ராஜினாமாதான்.

இவர் மக்கள் நீதி மய்யம் மீது கடுமையான புகார்களை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.,

சி.கே. குமரவேல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கடலூர்- நாகை பொறுப்பாளராக இருந்தார். நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த குமரவேல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீதும், செயற்குழு உறுப்பினர் கோவை சரளா மீதும் புகார் வைத்தார்.

அவர் கூறியதாவது, ‘மக்கள் நீதி மய்யமும் எல்லா கட்சி போலத்தான் செயல்படுகிறது. கமல்ஹாசனின் போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. கோவை சரளா என்னை நேர்காணல் செய்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் கட்சியில் சேர்ந்த கோவை சரளாவிற்கு கமல்ஹாசன் செயற்குழு பதவி கொடுத்ததை ஏற்க முடியுமா? அதனால் தான் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று குமரவேல் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் பேசிய கோவை சரளா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், நான் கட்சியில் சேர்ந்து 2 நாட்கள் தான் ஆகிறது. ஆனால் எனக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அதன் அடிப்படையில் என்னை நேர்காணல் செய்ய கமல்ஹாசன் அழைத்தார் என்று கூறினார்.

மேலும் குமரவேல்- க்கு பதிலடி தரும் வகையில், “நான் முட்டாள் என்று குமரவேல் நினைக்கிறாரா? எனக்கு அரசியல் தெரியாது, எனக்கு கேள்வி கேட்க தகுதியில்லை, நேர்காணல் செய்ய தகுதி இல்லை என்று குமரவேல் நினைக்கிறாரா? கமல்ஹாசனை முட்டாளை பயன்படுத்துகிறார் என்று குமரவேல் சொல்கிறாரா?என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் என்னிடம் நேரடியாக இதை சொன்னால் அவருக்கு நான் பதில் சொல்வேன். அங்கு நான் மட்டுமே நேர்காணல் செய்யவில்லை, பலர் அங்கு கேள்வி கேட்டனர்.

ஆனால் நான் மட்டும்தான் குமரவேலுக்கு தெரிந்தேனா? ” என்று கோவை சரளா தற்போது கேள்வி எழுப்பியுள்ளார்.