கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கி ஹீரோவாக தூள் கிளப்பி வருபவர் சூரி. இவரது நடிப்பில் கொட்டுக்காளி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
இவர் நடிப்பில் வெளியான கருடன் ,விடுதலை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் கொட்டுக்காளி படத்தின் மீது மக்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்தப் படத்தை பிஎஸ் வினோத் ராஜ் இயக்க எஸ்.கே புரொடக்சன் தயாரித்து உள்ளது. நேற்று இந்த படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.
அந்த வகையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றன.