கொட்டுக்காளி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. இவரது நடிப்பில் கொட்டுக்காளி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்திலும் எஸ்.கே ப்ரோடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடித்தது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது.
அதில், கொட்டுகாளிக்கு இன்னும் நான்கு நாட்கள், அசல் மற்றும் எதார்த்தமான சிகிச்சை உங்களை கதைக்கு நெருக்கமாக கொண்டு வரும் ஆகஸ்ட் 23 அன்று இந்த பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் காத்திருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளது.
இந்தப் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.