கொட்டுக்காளி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக நடித்து வருபவர் சூரி.இவரது நடிப்பில் கொட்டுக்காளி என்ற திரைப்படம் வெளியானது.
வினோத் ராஜ் இயக்கத்திலும் எஸ்கே ப்ரோடக்ஷன் தயாரிப்பிலும் வெளியானது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் இந்த படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி வருகின்றனர் அந்த வகையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல் நாளில் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் வார இறுதி நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது