KondaKadalai Cutlet : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

KondaKadalai Cutlet :

தேவையான பொருட்கள்  :

கொண்டைக்கடலை – 2 கப், வெங்காயம் – 1,
பூண்டு – 4 பற்கள், தனியா தூள் – 2 டீஸ்பூன், சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்,
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை,
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு.

செய்முறை:

பேன் தொல்லையால் அவதியா?கவலை வேண்டாம். பேன் தொல்லை நீங்க, இதோ, சில டிப்ஸ்!!

1) வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2) கொண்டைக்கடலையை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்த பின் நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3) ஒரு பௌலில் கொண்டைக்கடலையைப் போட்டு, அத்துடன் வெங்காயம், பூண்டு, தனியா தூள், சீரகம், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

4) அடுத்து அதனை கட்லெட் வடிவில் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

5) தோசை கல்லை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக வேக வைக்கவும்.

6) சுவையான கொண்டைக்கடலை கட்லெட் ரெடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here