Master
மாஸ்டர் திரைப்படத்துடன் பிரபல நடிகரின் படமும் மோத இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் தளபதியான விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

படத்தை கோடை விருந்தாக தமிழ் புத்தாண்டில் வெளியிட படக்குழு திட்டம் போட்டு வருகிறது. இந்நிலையில் சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படமும் தமிழ் புத்தாண்டு ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படங்கள் மோதி கொண்டால் ஜெயிக்க போவது மாஸ்டரா? கொம்பு வச்ச சிங்கமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Komba Vacha Singamada

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.