Kollywood Top Director’s First Acting Movies In Tamil – FULL LIST

Celebrities Wishes to Sonu Sood : பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட், தமிழ் கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் முன்னணி நடிகராக திகழ்கிறார். இவர், வில்லனாக நடித்த “அருந்ததி” படம் மூலம் பெரிதும் பிரபலமானார்.

இந்தக் கொரோனா காலகட்டத்தில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர் மாடு வாங்க பணம் இல்லாமல் மகள்களை வைத்து ஏர் பூட்டி நிலத்தை உழுத வீடியோ வெளியாகி வைரலானது.இதைப்பார்த்த சோனு சூட், டிராக்டர் ஒன்றை விவசாயிக்கு நன்கொடையாக அளித்தார்.

அது மட்டுமல்ல. ஏழை எளியோருக்கு தேடித் தேடி உதவி செய்யும் குணமுடைய சோனு சூட், இதன்மூலம் நிஜ வாழ்க்கையில் அவர் ஹீரோவாக வாழ்ந்து காட்டினார்.

தனது 42வது பிறந்தநாளை கொண்டாடும் சோனு சூட்-க்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலை தளங்களின் வாயிலாக தெரிவித்த வண்ணம் உள்ளனர்.