Kolkata Knight Riders
Kolkata Knight Riders

Kolkata Knight Riders – ஐபிஎல் தொடரின் 2-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இருவரும் பொறுப்புடன் ஆடி 100 ரன்களை சேர்த்தனர். பேர்ஸ்டோ 39 ரன்னில் அவுட்டானார்.

அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 53 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரி விளாசி 85 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய யூசுப் பதான் ஒரு ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் சங்கர் 40 ரன்களுடனும், மணிஷ் பாண்டே 8 ரன்களில் இருந்தனர்.

இதையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், நிதிஷ் ரானா ஆகியோர் களமிறங்கினர்.

ஷகிப் அல் ஹசன் பந்தில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து கிறிஸ் லின் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ராபின் உத்தப்பா இறங்கினார்.

இருவரும் இணைந்து 80 ரன்கள் சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய ராபின் உத்தப்பா 35 ரன்னில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து, கேப்டன் தினேஷ் கார்த்திக் இறங்கினார். அவர் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஆண்ட்ரு ரசல் களமிறங்கினார்.

நிதானமாக ஆடிய நிதிஷ் ரானா அரை சதமடித்தார். அவர் 47 பந்துகளில் 3 சிக்சர், 8 பவுண்டரியுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷுப்மான் கில் இறங்கினார்.

இறுதிக்கட்டத்தில் ஆன்ட்ரூ ரசல் அதிரடியில் இறங்கினார். அவர் சிக்சர், பவுண்டரியாக விளாசினார். அவர் 19 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஷுப்மான் கில் 18 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.