Kolaigaran Movie Review | Arjun Sarja | Vijay Antony | Ashima Narwal | Simon K. King | Seetha | Nassar | Sathyan | Guru Somasundaram | Mayilsamy |
Kolaigaran Movie Review

Kolaigaran Movie Review :

ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கொலைகாரன்.

இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

விஜய் ஆண்டனி ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு தனி நபராக வாழ்ந்து வருகிறார். படத்தின் நாயகி அஷிமா தன்னுடைய அம்மா சீதாவுடன் வாழ்ந்து வருகிறார்.

விஜய் ஆண்டனிக்கும் அஷிமாவிற்கும் இடையே காதல் ஏற்படுகிறது. அதன் பின்னர் திடீரென கொலை ஒன்று நடக்க அந்த வழக்கை கையில் எடுக்கும் அர்ஜுன் விஜய் ஆண்டனியையும் அஷிமாவையும் விசாரிக்கிறார்.

இந்த விசாரணைக்கு பிறகு அஷிமா வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் உள் நுழைய மீண்டும் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையை செய்தது யார்? கொல்லப்பட்டது யார் என்பது தான் சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

விஜய் ஆண்டனி வழக்கமான நடிப்பை காட்டிலும் இப்படத்தில் கூடுதல் எப்போர்ட் எடுத்து நடித்துள்ளார். அவருடைய கடின உழைப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஆக்ஷன், ரொமான்ஸ் என இரண்டிலும் மிரட்டியுள்ளார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்தால் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் சொல்லி தெரியவில்லை. மங்காத்தா படத்தை போல மாஸான நடிப்பால் நம்மை கட்டி போட்டுள்ளார்.

நாயகி அஸீமா தமிழில் முதல் முறையாக அறிமுகமாகிறார். 2 தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு பர்பெக்ட் மேட்ச்சாக அவருக்கு இணையாக நடிப்பை கொடுத்துள்ளார்.

மேலும் சீனியர் நடிகர்களான நாசர், சீதா ஆகியோர்களின் நடிப்பும் அற்புதம்.

தொழில்நுட்பம் :

இசை :

இசையமைப்பாளர் சைமன் கிங் அழகான பின்னணி இசை, பாடல்கள் என அனைத்திலும் அட்டகாசம் செய்துள்ளார்.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

ஒளிப்பதிவாளர் முகேஷ் மற்றும் எடிட்டர் கெவின் என இருவரும் அவரவர் பணிகளை அருமையாக முடித்து கொடுத்துள்ளனர்.

இயக்கம் :

இறுதி வரை சஸ்பென்ஸ் உடைக்காமல் நம்மை அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடனே ஆண்ட்ரு கொண்டு சென்றிருப்பது பாராட்ட வேண்டியது.

தம்ப்ஸ் அப் :

1. அர்ஜுன், விஜய் ஆண்டனியின் நடிப்பு

2. சஸ்பென்ஸ்ஸான திரைக்கதை

3. பின்னணி இசை

தம்ப்ஸ் டவுன் :

1. காமெடி இல்லை. ஆனாலும் அந்த குறை துளியும் தெரியாத அளவிற்கு படத்தை முழுக்க முழுக்க சீரியஸாக கொண்டு சென்றுள்ளனர்.

REVIEW OVERVIEW
கொலைகாரன் திரைவிமர்சனம்
kolaigaran-movie-review-2மொத்தத்தில் கொலைகாரன் சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லாத படம்.