Ko Movie Secret
Ko Movie Secret

தல அஜீத்துக்காக எழுதப்பட்ட கதையில் இளம் நடிகர் ஒருவர் நடித்து ஹிட்டான கதை தற்போது தெரிய வந்துள்ளது.

Ko Movie Secret : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்காக எழுதப்பட்ட பல மெகாஹிட் படங்களை தவற விட்டுள்ளார். அந்தப் படங்களில் மற்ற நடிகர்கள் நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

அப்படி கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படமான கோ படமும் அஜித்துக்காக எழுதப்பட்டது தானாம்.

ராஜமௌலி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறாரா? வெளியான புது தகவல்

ஆனால் அப்போது கால்ஷீட் பிரச்சனையால் அஜித் இந்த படத்தை நிராகரித்துள்ளார். அதன் பின்னர் கேவி ஆனந்த் சிம்புவை வைத்து இயக்கலாம் என திட்டமிட சிம்பு படப்பிடிப்பிற்கு வர மாட்டார் என தயாரிப்பாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர்‌ தான் இந்த வாய்ப்பு ஜீவாவுக்கு செல்ல அவருக்கு இது மெகா ஹிட் படமாக அமைந்து விட்டது.