டாக்டர் படத்தை ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

KJR Studios About Doctor Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

தயவுசெய்து கேட்காதீர்கள்.. டாக்டர் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை.!!

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் தற்போது கொரானா வைரஸ் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக இந்த படத்தின் மீது தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

இருப்பினும் பலரும் டாக்டர் படத்தின் ரிலீஸ் எப்போது என கேட்டுக்கொண்டே வந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழலில் டாக்டர் ரிலீஸ் என்பது சாத்தியமில்லாத ஒன்று. முதலில் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். சரியான நேரத்தில் டாக்டர் திரைப்படம் வெளியாகும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தயவுசெய்து கேட்காதீர்கள்.. டாக்டர் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை.!!