KJR Rajesh Helps to Director Majith
KJR Rajesh Helps to Director Majith

விஜய் பட இயக்குனருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அஜித் பட தயாரிப்பாளர் ஒருவர் ஓடோடி உதவியுள்ளார்.

KJR Rajesh Helps to Director Majith : கடந்த வருடம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும் சென்னை கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகிறது. இங்கு மட்டும் கிட்டத்தட்ட 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய படமான தமிழன் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மஜித் என்பவரும் இந்த கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கும் போதே மருத்துவமனை நிர்வாகம் 2 லட்சத்து 89 ஆயிரம் செலவாகும் என கூறியுள்ளது.

அஜித் ரசிகர்கள் கொடுத்த தைரியம்.. மீண்டும் விஜயின் மாஸ்டருடன் மோதும் பிரபல நடிகரின் படம் – அதிரடி அறிவிப்பு.!

அதன் பின்னர் குணமடைந்து வீடு திரும்ப இருந்த நிலையில் பில்லை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது 4 லட்சத்து 85 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் இயக்குனர் மஜித் என்ன செய்வது என தெரியாமல் தவித்து உள்ளார். மொத்த பணத்தையும் கட்டினால் மட்டும் தான் டிச்சார்ஜ் செய்வோம் எனவும் மருத்துவமனை கூறியுள்ளது.

இந்த தகவலை அறிந்த கே கே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் இயக்குனர் மஜித்திற்கு உதவி அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளார்.

இந்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தை வாங்கி வெளியிட்டு இருந்தது.

மேலும் தற்போது டாக்டர் படத்தை தயாரித்து வருகிறது. நயன்தாராவின் அறம் உள்ளிட்ட படங்களை இந்த நிறுவனம் தான் தயாரிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கி தவித்த இயக்குனருக்கு அஜித் பட தயாரிப்பாளர் செய்த உதவி திரையுலகினர் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.