Kiraganam

🌘🌑 சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திர கிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரிய கிரகணமும் நிகழ்கிறது. பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.

🌘🌑 சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

🌘🌑 சக்தி வாய்ந்த பவுர்ணமி நிலவின் அல்லது சூரியனின் ஒளி வீச்சு தடைபடுகிற பொழுது இயற்கையில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. நல்லதை விட கெடுதலே அதிகம்.

🌘🌑 கிரகண நேரத்தில், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் ஏற்படுகின்றன. இதனால் பிறக்கும் குழந்தைக்கு சில ஊனங்களை ஏற்படுத்தும்.

🌘🌑 பிரசவ காலத்தில் தாய்க்கும் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இத்தனையையும் ஆராய்ந்து தான் சாஸ்திரங்கள் கிரகண காலத்திற்கென சில முறைகளை வகுத்துள்ளன. இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவை தான்.

🌘🌑 கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

🌘🌑 அறிவியல் ரீதியாக வேறு காரணங்கள் இருந்தாலும் சாஸ்திரம் இதைத்தான்
ஆணித்தரமாக கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here