Kiran Rathod Army for Bigg Boss
Kiran Rathod Army for Bigg Boss

பிக்பாஸ்ல எங்க சப்போர்ட் உங்களுக்குத்தான் என இப்போது ஆர்மியை தொடங்கி உள்ளனர் ரசிகர்கள்.

Kiran Rathod Army for Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் 3 சீசன் களை முடிவு செய்துள்ள நிலையில் அக்டோபர் 4ம் தேதி முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்னும் ஒளிபரப்பு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் ஆகியோர் ஹோட்டலில் தனிமையில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து இருந்தது.

அம்பலமான அஜித், ஷாலினி காதல் சீக்ரெட் கோட் – கிண்டலடித்த இயக்குனரால் கடுப்பான ஷாலினி, அப்படி என்ன வார்த்தை அது தெரியுமா?(Opens in a new browser tab)

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கிரன் ரதொட் பெயர் அடிபட்டு வருகிறது.

இதனால் உற்சாகம் அடைந்த அவரது ரசிகர்கள் நீங்க மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எங்களுடைய ஃபுல் சப்போர்ட் உங்களுக்கு தான் என கூறி வருகின்றனர்.

அவர் உண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை. ஆனால் அதற்குள் அவருக்கென தனி ஆர்மியை உருவாக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறனர் ரசிகர்கள்.

கடந்த சீசனில் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு தான் அவருக்கு ஆர்மி உருவானது. ஆனால் கிரண் ரத்தோட்டுக்கு தற்போதே ஆர்மி உருவாக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ்ல எங்க சப்போர்ட் உங்களுக்கு தான் இப்போவே ஆர்மியை தொடங்கிய ரசிகர்கள் - அதுவும் யாருக்கு தெரியுமா?