நடிகர் கிங்காங் அவர்களின் தாயார் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மனதை கவர்ந்தவர் கிங்காங். இவரின் தாயார் காசி அம்மாள். அவருக்கு வயது 72.
இந்நிலையில் இன்று அதிகாலை கிங்காங் பிறந்த நாளுக்கு 12:30 மணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் திடீரென்று 1:30மணிக்கு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
இதனை எண்ணி மிகவும் மனம் வருந்தி உள்ளார் கிங்காங். இந்தத் தகவல் வெளியாகி உறவினர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றன.