Kidney Stone Reason : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Kidney Stone Reason :

▪ சிறுநீரக கல் பிரச்சினை என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் என அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

▪இயல்பாக உடல் பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப் பழக்கம், போதுமான நீர் அருந்தாமை போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது.

▪ யூரிக் அமிலம் ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். சில குறைபாடுகளால் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.

▪ நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது.

நேர்கொண்ட பார்வை செட்டில் இருந்து கசிந்த அஜித்தின் புது புகைப்படங்கள் – தெறிக்க விடும் ரசிகர்கள்.!

இப்படிப்பட்ட சமயங்களில் சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.

▪ சில சிறுநீர்ப்பெருக்கி மருந்துகள், கால்சியம் கலந்த மருந்துகள் கல் உருவாகக் கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

▪ அறிகுறிகள்:

சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது இடுப்பைச் சுற்றி தாங்கமுடியாத வலி ஏற்பட்டு கடுமையான வியர்வை ஏற்படும்.

▪ சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். ஒருவருக்கு ஒருமுறை சிறுநீரகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால் அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.

▪ தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here