ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள இரண்டு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபல நடிகை.

Kiara Advani in Shankar Movie : இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவர் தற்போது தமிழில் கமலஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க சங்கர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளார்.

விராட் கோலியின் டுவிட்டர் பதிவு : குழப்பத்தில் ரசிகர்கள்

தற்போது இந்த இரண்டு படங்களிலும் நாயகியாக நடிக்க ஒரே நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் கியாரா அத்வானி தான் இந்த இரண்டு படங்களிலும் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay-க்கு ஒன்றாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன Maanaadu பிரபலங்கள்! | STR, Thalapathy, Venkat Prabhu

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கியாரா அத்வானியின் பிறந்தநாள் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.