வாரிசு படத்தில் நடிகை குஷ்பு ஒரு காட்சியில் கூட இடம் பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார் எடிட்டர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11-ம் தேதி வாரிசு திரைப்படம் வெளியானது.

வாரிசு படத்தில் ஒரு காட்சியில் கூட இடம் பெறாத குஷ்பூ.. எடிட்டர் வெளியிட்ட காரணம் - என்ன சொல்கிறார் பாருங்க

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் 5 நாளில் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் எக்கச்சக்கமான பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் குஷ்பூவும் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருந்தார். தளபதி விஜய் கூட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் குஷ்பூவுக்கு நன்றி கூறி இருந்தார்.

ஆனால் படத்தில் குஷ்புவின் காட்சிகள் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை. இது குறித்து எடிட்டர் கே எல் பிரவீன் விளக்கம் அளித்துள்ளார். எதிர்பாராத விதமாக படத்தின் நீளம் கருதி காட்சிகள் இடம் பெறாமல் போனது. படத்தில் நடித்தும் காட்சிகள் இடம் பெறாததால் அவர்கள் என் மீது எவ்வளவு கோபமாக இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.

வாரிசு படத்தில் ஒரு காட்சியில் கூட இடம் பெறாத குஷ்பூ.. எடிட்டர் வெளியிட்ட காரணம் - என்ன சொல்கிறார் பாருங்க

வம்சி நடிகை குஷ்புவிடம் பேசி விட்டார், அவரும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என சொல்லிவிட்டார் இருந்தாலும் அவருடைய காட்சிகளை மீண்டும் இணைக்க முயற்சிகள் செய்து வருகிறோம். இது வராமல் நடந்த இது தவறுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.