முப்பது ஆண்டுகள் நிறைவுபெற்ற சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை திரைப்படம் இதனை குறித்து மன நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் குஷ்பு. இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அங்கீகாரத்துடன் சிங்கம் போல் வலம் வருபவர் தான் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் 1992 ஆம் ஆண்டில் ஜூன் 27ஆம் தேதியில் திரையரங்குகளில் “அண்ணாமலை” திரைப்படம் வெளியானது. இப்படத்தை இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் நடிகர் ரஜினி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களாக மனோரமா, சரத் பாபு, ஜனகராஜ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படம் -  வைரலாகும் குஷ்புவின் பதிவு.

இப்படம் அன்றைய காலகட்டத்திலே 25 வாரம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கண்டுள்ளது. இப்படம் ரஜினியின் படங்களில் இன்று வரை முக்கிய பங்கு வருகிறது. நேற்றோடு இப்படம் வெளிவந்து 30 ஆண்டுகளை கடந்து இருப்பதை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணன் அவர்கள் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசி புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் நேற்றைய தினம் இணையத்தில் வெளிவந்து ரசிகர்களின் இடையே தற்போது வைரலாகி வருகிறது.

30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படம் -  வைரலாகும் குஷ்புவின் பதிவு.

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த குஷ்பூ அவர்கள் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அண்ணாமலை, என் கேரியரில் மிக சிறந்த படங்களில் ஒன்று, 30 ஆண்டுகள் கடந்துவிட்டதை என்னால் நம்பமுடியவில்லை. ரஜினிகாந்த் சாரிடம் பணிபுரிந்தது மகிழ்ச்சியாகவும் மரியாதையாகவும் உணர்கிறேன். மேலும், சுரேஷ்கிருஷ்ணா சாருக்கும், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சாருக்கும் நான் கண்டிப்பாக கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.