கைதி படத்தின் கதை என்னுடையது என லோகேஷ் கனகராஜ் மீதும் தயாரிப்பு நிறுவனத்தின் மீதும் வழக்குத் தொடரப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Khaithi Movie Story Issue : தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் ரூபாய் 105 கோடி வசூல் செய்தது. ‌‌‌‌‌

மேலும் தற்போது கார்த்தியை வைத்து கைதி 2 எடுக்கும் பணிகள் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புழல் சிறையில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜூவ் என்பவர் கதைதான் கைதி என்பது தெரியவந்துள்ளது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த ராஜுவ் தன்னுடைய நண்பருடன் இணைந்து எஸ் ஆர் ராஜன் என்பவரை சந்தித்து கதை கூறியுள்ளார்.

கதை திருட்டில் சிக்கிய லோகேஷ் கனகராஜ்.. கைதி இவரோட கதையா? வெளியான அதிர்ச்சித் தகவல்

கதைக்கு 15,000 முன்பணம் கொடுத்து விட்டு பணத்தை எடுக்கும்போது மீதி பணம் தருவதாக கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர். எஸ்ஆர் பிரபு இந்த கதையை லோகேஷ் கனகராஜ் வைத்து இயக்கி உள்ளார். எதேர்ச்சியாக எதேர்ச்சையாக கைதி படத்தை பார்த்த ராஜூவ் தன்னுடைய கதையில் சிறிய பகுதியை கைதி என்ற பெயரில் இயக்கி இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்து வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன் கதையை படமாக்கியதற்காக ரூபாய் 4 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். இதுகுறித்து எஸ்ஆர் பிரபு கைது படத்தின் கதை லோகேஷ் கனகராஜ் எழுதிய கதை தான். எனக்கு நீதிமன்றத்தில் இருந்து எந்த நோட்டீசும் வரவில்லை. அப்படியே வந்தாலும் அதற்கு பதிலளிக்க தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.