விரைவில் கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என தயாரிப்பாளர் கூறியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
Khaithi 2 Details : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று கைதி. மாநகரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் கைதி. இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து இருந்தது.
அப்போதே படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து இத்திரைப்படம் பிகிலுடன் நேரடியாக மோதி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்த எஸ்ஆர் பிரபு விரைவில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.