கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

KGF2 Release Rights in Tamil : கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் : ஐகோர்ட் உத்தரவு

திரையரங்குகள் திறக்கப்பட்டதும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள்தான் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி சுல்தான் உள்ளிட்ட படங்களை தயாரித்தனர். அதுமட்டுமல்லாமல் பல சிறு பட்ஜெட் வெற்றி படங்களை கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கும் Vijay TV-க்கும் சண்டையா? – Actress Vanitha Vijayakumar Press Meet

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.