KGF Movie
KGF Movie

KGF Movie : தமிழகத்தில் பெரும்பாலும் ஓடக்கூடிய பிறமொழி படங்கள் ஒன்று ஆங்கில படங்களாக இருக்கும் அல்லது தெலுங்கு படங்களாக இருக்கும். தற்போது மலையாள படங்களும் தமிழகத்தில் பெருவாரியாக வசூல் செய்ய துவங்கிவிட்டன.

இந்த பட்டியலில் ஒரு கன்னட படம் இணைந்ததுதான் பலருக்கும் ஆச்சரியம். கன்னட சூப்பர்ஸ்டார் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழகத்திலும் வசூல் மழை பொழிந்தது.

தளபதி 63-ல் மேலும் ஒரு பிரபல நடிகர் – விஜயை பற்றி என்ன சொல்கிறார் பாருங்க.!

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்க உள்ளதாம்.

மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் படு பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் மேலும் சண்டைக்காட்சிகளில் மேலும் அனல் தெறிக்கும் எனவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் நடித்தவர்கள் போக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here