KGF Review

KGF Movie Review : பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் KGF. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் உலகமன் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளது.

தமிழில் இப்படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் வெளியிட்டுள்ளார்.

கதைக்களம் :

பல ஆண்டுகளுக்கு முன்னர் கோலார் தங்க சுரங்கம் கே.ஜி எப் ஒரு கும்பலின் கையில் உள்ளது. இந்த கும்பல் மக்களை கொத்தடிமைகளாக வேலை வாங்கி வருகின்றனர்.

மற்றொரு கும்பல் கே. ஜி.எப்-பை கைப்பற்ற மும்பையில் பிரபல டானாக உள்ள யாஷை உள்ளே அனுப்புகின்றனர். அந்த தங்க சுரங்கத்திற்குள் மக்களில் மக்களாக உள்ளே நுழைகிறார்.

அங்கு கஷ்டப்படும் மக்களை பார்த்து இவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்குகிறார்.

முதல் பாகத்தில் பாகுபலி படத்தை போல ஒரு லீட் மட்டுமே கொடுத்துள்ளனர். படத்தின் விறுவிறுப்பான கதை இரண்டாம் பாகத்தில் தான் இடம் பெறுவது போல இப்படத்தை இயக்கியுள்ளனர்.

யாஷ் :

நடிகர் யாஷ் இந்த படத்தில் மிரட்டலான மாஸான நடிகராக முழு எபோர்ட் கொடுத்து நடித்துள்ளார். இந்த படத்தில் யாஷ் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஸ்ரீநிதி ஷெட்டி :

நாயகியாக நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டியும் தன்னுடைய பங்கை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார். ஆனால் படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு பெரியளவில் முக்கியத்துவம் இல்லை.

மற்ற நடிகர், நடிகைகள் :

இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகள் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இசை :

Ravi Basrur, Tanishk Bagchi ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். பின்னணி இசை, பாடல்கள் என அனைத்துமே செம் மாஸாக படத்திற்கு மிக பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு, எடிட்டிங் :

புவன் கவுடா இப்படத்திற்கு பிரம்மாண்டமாக ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இருவரின் பணிகளும் மிக பிரமாதம்.

இயக்கம் :

பிரஷாந்த் நீல் அவர்களின் இயக்கம் அற்புதம்.. பாகுபலியை போல ஒரு பிரம்மாண்ட படத்தை கையில் எடுத்துள்ளார். அத்தனையும் முழுமையாகவும் சிறப்பாகவும் கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை
2. யாஷ் உட்பட ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பு
3. இசை
4. பாடல்கள்
5. செண்டிமெண்ட் காட்சிகள்
6. சண்டை காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

1. படத்தின் கதையை புரிந்து கொள்ள கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது.

REVIEW OVERVIEW
KGF விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
kgf-movie-reviewமொத்தத்தில் KGF பாகுபலியை போல ஒரு பிரம்மாண்ட படைப்பு.