நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் கே ஜி எஃப் திரைப்படத்தின் பிரபலமான நடிகர் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்த கே ஜி எஃப் நடிகர்!!!…. சூப்பர் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். ஜெயில் கதை களத்தை கொண்டு வித்தியாசமாக உருவாகி வரும் இப்படத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கின்றார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் வயதான தோற்றத்தில் இருக்கும் ரஜினியின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்த கே ஜி எஃப் நடிகர்!!!…. சூப்பர் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!.

இந்நிலையில் ரஜினி நடிக்கும் முக்கியமான காட்சிகளை சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து இப்படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பை படக்குழு ஹைதராபாத்தில் படமாக உள்ளனர். இதில் கே ஜி எஃப் நடிகர் காசிம் சாச்சா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற ஹரிஷ் ராய் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.