கே ஜி எஃப் 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

KGF 2 Theaters Count Increase : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து மறுநாள் கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழகத்தில் பீஸ்ட் படத்துக்கு 800 திரையரங்குகள் கிடைத்தன. ஆனால் கே ஜி எஃப் 2 படத்திற்கு வெறும் 250 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தை காட்டிலும் மக்கள் கே ஜி எஃப் 2 படத்தினை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை தூக்கி விட்டு கே ஜி எஃப் 2 படத்தை திரையிட தொடங்கி உள்ளனர். படம் வெளியான முதல் நாளே கே ஜி எஃப் 2 படத்திற்கு மேலும் 50 திரையரங்குகள் கூடுதலாக கிடைத்துள்ளது.

தொடர்ந்து பல இடங்களில் பீஸ்ட் படத்தை தூக்கி விட்டு கே ஜி எஃப் 2 படத்தினை திரையிட தொடங்கி இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.