KGF 2 Release Update
KGF 2 Release Update

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் OTT வழியாக வெளியாவதாக பரவிய தகவலுக்கு நடிகர் யாஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

KGF 2 Release Update : கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம் கே ஜி எஃப்.

இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவினுக்காக ஒன்று கூடும் பிரபலங்கள், டிவிட்டர் டிரெண்டிங்கில் தெறிக்கவிடும் ரசிகர்கள்

ஆனால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் படம் ரிலீசாவதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் இந்த படம் OTT வழியாக வெளியாக இருப்பதாக தகவல் பரவியது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் யாஷ் அவர்களும் விளக்கம் அளித்துள்ளனர்.

அதாவது இந்தப் படம் OTT வழியாக வெளியாவதாக பரவிய தகவல் உண்மை அல்ல. இப்படம் நிச்சயம் தியேட்டரில் தான் ரிலீசாகும் என விளக்கம் கொடுத்துள்ளனர்.