கே ஜி எஃப் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

KGF 2 New Release Date : கன்னட சினிமாவின் பிரபல நடிகராக வலம் இருப்பவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

கே ஜி எஃப் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி ‌‌- நடிகர் யாஷ் வெளியிட்ட அதிரடி தகவல்

படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக நிறைவுபெற்று ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படம் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது கொரானா வைரஸ் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருவதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இருப்பினும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து தொடர்ந்து பல வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளிவந்த நிலையில் நடிகர் யாஷ் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

கேஜிஎப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும். ஜூலை 16 க்கு பதிலாக தசரா விருந்தாக அக்டோபர் 15-ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.