KGF 2 Movie Satellite Rights
KGF 2 Movie Satellite Rights

கே ஜி எஃப் 2 படத்தின் சாட்டிலைட் மூலம் ரூபாய் 120 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

KGF 2 Movie Satellite Rights : கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிரம்மாண்ட திரைப்படம் கே ஜி எஃப். இந்தப் படத்தை தமிழில் நடிகர் விஷால் வெளியிட்டிருந்தார்.

மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

திருமணம் பற்றி பரவிய தகவல் – வரலட்சுமி கொடுத்த ஆவேச விளக்கம் ..!

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் அக்டோபர் 23ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமை ரூபாய் 120 கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால் இது குறித்து விசாரிக்கையில் படத்தின் சாடிலைட் உரிமம் இன்னும் விற்பனை ஆகவில்லை.

ரூபாய் 120 கோடிக்கு விற்பனை ஆனதாக வைரலாகும் தகவல் உண்மையல்ல என்பது தெரிய வந்துள்ளது.