பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி, ஈஸ்வரி ராவ், பிரகாஷ் ராஜ் என பலர் நடிப்பில் வெளியாகியுள்ள கே ஜி எஃப் 2 படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

முதல் பாகத்தில் கருடனை கொன்று கேஜிஎப்-ஐ கைப்பற்றுகிறார் யாஷ். இந்த நிலையில் அவருக்கு அரசியல் ரீதியாகவும் புதிய எதிரியாக சஞ்சய் தத்தும் முளைக்கின்றனர். இவர்களை எதிர்த்து அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது தான் படத்தின் கதை. இப்படத்தின் தொடர்ச்சியாகவே இந்த படத்தின் கதை களம் அமைந்துள்ளது.

யாஷ் வெறித்தனமாக நடிப்பு, மிரட்டலான அறிமுகக் காட்சிகள். அதற்கு இணையாக சஞ்சய் தத் அறிமுகம், பிரகாஷ்ராஜின் நடிப்பு என படத்தில் நடித்துள்ள ஒட்டுமொத்த நடிகர்களும் திறம்பட நடித்துள்ளனர்.

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கன்னட திரையுலகுக்கு மகுடம் சூடும் படமாக இருக்கும். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், சஸ்பென்ஸ் மற்றும் திரில் நிறைந்ததாக உள்ளது. வசனங்கள் அனைத்தும் வலிமையாக உள்ளது. பாடல்கள் ஓகே ரகம் தான், ஆனால் பின்னணி இசை வேறலெவலில் இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம். காட்சிகள் ஒவ்வொன்றையும் அவ்வளவு அழகாக நேர்த்தியாக படமாகியுள்ளது.

இறுதி வரை படத்தின் தீவிரத்தை இயக்குனர் உணர வைத்துள்ளது சிறப்பு. படம் முழுவதும் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறார். ‌‌

தம்ப்ஸ அப் :

1. அனைவரின் நடிப்பு

2. இசை

3. ஒளிப்பதிவு

4. இயக்கம்

5. ஆக்சன், எமோஷன் காட்சிகள்

6. வசனங்கள்

தம்ப்ஸ் டவுன் :

1. பாடல்கள் மட்டுமே சுமார் ரகம்

2. நேரத்தை குறைத்து இருக்கலாம்

REVIEW OVERVIEW
கேஜிஎப் 2 விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
kgf-2-movie-reviewமொத்தத்தில் கேஜிஎப் சாப்டர் 2 முதல் பாகத்தை விட படு மிரட்டல். பக்கா ஆக்சன் த்ரில்லர்.