Chimili Urundai

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – ஒரு கப், பொடித்த வெல்லம் – 3/4 கப், வேர்க்கடலை – கால் கப்,
எள் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

1) வேர்க்கடலை, எள் இரண்டையும் வாணலியில் லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
2) கேழ்வரகு மாவில் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு பிசைந்து கனமான ரொட்டியாக தட்டி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுத்து வைத்துக்கொள்ளவும்.
3) ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடித்த வேர்க்கடலை, எள், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
4) இதை கிண்ணத்தில் போட்டு உருண்டை பிடித்து சாப்பிடக் கொடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here