நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்லமான நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக ‘மாமன்னன்’ திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் தல அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக்கில் உருவாகும் ‘போல ஷங்கர்’ என்கின்ற படத்தில் சிரஞ்சீவி அவர்களுக்கு தங்கையாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நானியுடன் இணைந்து ‘தசரா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இதற்கு இடையில் அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது தனது செல்லமான நாய்க்குட்டியை கட்டி அணைத்து கொஞ்சி கொண்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அந்த க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.