Keerthy Suresh Upcoming Movie Update
Keerthy Suresh Upcoming Movie Update

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள பிரமாண்ட படத்தில கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Keerthy Suresh Upcoming Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் நடிகையர் திலகம் சாவித்திரியின் பயோபிக் படமான மகாநதி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்று இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பல நூறு கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக உள்ள படம் அதிப்பூர்ஷ். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் தற்போது அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.