Keerthy Suresh Tribute to Vijay Birthday
Keerthy Suresh Tribute to Vijay Birthday

தளபதி விஜயின் பிறந்த நாளில் தன்னுள் இருக்கும் புது திறமையை வெளிக்காட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Tribute to Vijay Birthday : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

ரஜினியின் பேட்ட 2 எப்போது.? – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன்டாக்

மேலும் இவரது நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை பெண் குயின் என்ற திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகியிருந்தது.

தற்போது கீர்த்தி சுரேஷ் இன்று தளபதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் மாஸ்டர் படத்தில் இடம்பெறும் ஒரு குட்டி ஸ்டோரி என்ற பாடலுக்கு வயலின் வாசித்து அந்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ்க்கு இப்படி ஒரு திறமையா என வியந்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷின் திறமையைக் கண்டு அட்லியின் பதிவு

ரத்தின குமாரின் பதிவு

மஞ்சிமா மோகன் பதிவு

போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா பதிவு