சிம்புவின் எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் அடித்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தனது 48வது திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சிம்பு 48 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக கீர்த்தியிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால் கீர்த்தி சுரேஷிற்கு நடிகர் சிம்புவுடன் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும் என்பதால் இது குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.