தளபதி 66 படத்தில் கீர்த்தி சுரேஷின் ரீல் மகன் நடிப்பது உறுதியாகி உள்ளது.

Keerthy Suresh Son in Vijay 66 ; தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம் பீஸ்ட்.

தளபதி 66 படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷின் மகன்.. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இணையத்தில் வெளியான புகைப்படம்

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் 66 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் மகனாக பென்குயின் படத்தில் நடித்த சிறுவன் இணைந்துள்ளார்.

தளபதி 66 படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷின் மகன்.. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இணையத்தில் வெளியான புகைப்படம்

இவர் இயக்குனர் வம்சியை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இதனை உறுதி செய்துள்ளது.