Keerthy Suresh Video

Keerthy Suresh Video : இளம் பெண் ஒருவரின் டப்மேஷ் வீடியோ இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களை பரபரப்பாக்கியுள்ளது. காரணம் அந்த வீடியோவில் உள்ள பெண் அச்சு அசலான கீர்த்தியை போலவே இருப்பது தான்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது நடிப்புக்கு இடைவெளி விட்டு ஓய்வில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது சமூக வளையதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த டப்மேஷ் வீடியோவில் உள்ள பெண்மணி அச்சு அசலாக அப்படியே கீர்த்தியை போலவே உள்ளார்.

அந்த பெண்ணை கீர்த்தி சுரேஷ் அக்கா அல்லது தங்கச்சி என கூறினாலும் நம்பாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இருவரும் தோற்றமும் ஒன்றி போயுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்களோ யாருமா நீ? கீர்த்தி சுரேஷுக்கு அக்காவா? தங்கச்சியா? என வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here