Keerthy Suresh Reduced Her Salary
Keerthy Suresh Reduced Her Salary

ஊரடங்கும் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள முடிவு பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Keerthy Suresh Reduced Her Salary : தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள பெண் குயின் என்ற திரைப்படம் நாளை முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமாத் துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரபலங்கள் பலரும் தங்களது சம்பளத்தை குறைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார். 20 முதல் 30% வரை தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

கீர்த்தி சுரேஷின் இந்த முடிவுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.