Keerthy Suresh

Keerthy Suresh Marriage : திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் ஓபனாக கூறியுள்ளார். அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

பிரபல நடிகையான மேனகாவின் மகளான இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு நியூ இயர் ஸ்பெஷலாக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவரிடம் உங்களுக்கு காதல் திருமணத்தில் விருப்பமா? அல்லது வீட்டில் சொல்பவர்களை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு கீர்த்தி சுரேஷ் என்னுடைய அம்மாவும் அப்பாவும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

அதனால் என்னுடைய திருமணமும் காதல் திருமணமாகவும் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கும் திருமணமாகவும் தான் இருக்கும் என கூறியுள்ளார். அந்த நபர் யார் என்று தான் தெரியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.