அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Keerthy Suresh Love With Anirudh : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. தமிழில் இறுதியாக செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் செய்ய அவர்களது குடும்பத்தார் முயற்சி செய்து வரும் நிலையில் அவர் இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காகவே கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை குறைத்தார் என சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் இது குறித்து அவர்களிடம் கேட்க எங்களுக்கிடையில் நட்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என கூறுகின்றனர்.

அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் காதலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவலால் இரு தரப்பை சேர்ந்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.