ஒரே நேரத்தில் விஜய் சூர்யாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் பிரபல தமிழ் நடிகை ஒருவர்.

Keerthy Suresh in Upcoming Tamil Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் இறுதியாக அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார்.

ஒரே நேரத்தில் விஜய், சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல தமிழ் நடிகை.. மீண்டும் அடித்த ஜாக்பாட்.!!

மேலும் இவருக்கு சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு மொழியில் மட்டும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக இவர் ஒரே நேரத்தில் விஜய் மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்தச் சுடர் பிரகாசமாக எரிவதில்லை, முழு ஓய்வு பெறுகிறேன், நன்றி : டிவில்லியர்ஸ்

அதாவது பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரசிகர்களுடன் படம் பார்த்த Pugazh & Sivaangi – வைரலாகும் வீடியோ | Sabhaapathy FDFS

அதைப்போல் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் பாலா இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். பாலா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்தான் என தகவல் கிடைத்துள்ளது.

தளபதி விஜயுடன் பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். அதேபோல் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.