Keerthy Suresh in Ponniyin Selvan Poster

கீர்த்தி சுரேஷின் குந்தவை போஸ்டர் குறித்து புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Keerthy Suresh in Ponniyin Selvan Poster : தமிழ் சினிமாவில முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் தற்போது பொண்ணியின் செல்வன் என்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சியான் விக்ரம், திரிஷா, நயன்தாரா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அதாவது ஜெயம் ரவிக்கு அக்காவாக வரும் சீயான் விக்ரமுக்கு உடன்பிறந்த தங்கையாகவும் நடித்து வருகிறார் என போஸ்டர் ஒன்று வைரல் ஆனது.

இந்த நிலையில் தற்போது இந்த போஸ்டரை வெளியிட்ட நிறுவனம் இதற்கும் பொன்னியின் செல்வன் டீமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டர் என விளக்கம் அளித்துள்ளது. இதனால் கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரசிகர்களின் இந்த கேள்விக்கு படக்குழு என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.