Keerthy Suresh :
Keerthy Suresh :

Keerthy Suresh : அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதி கைவிட்ட இயக்குனரை கெட்டியாக பிடித்துகொண்ட ஜெயம்ரவி – யார் தெரியுமா?

ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தை அஹ்மத் இயக்குகிறார். அதன் பிறகு அவர் நடிக்கும் 25-வது படத்தை லக்‌ஷ்மண் இயக்குகிறார்.

உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் – ஷாக்காக்கிய புகைப்படம்!

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷை படக்குழு அணுகினார்களாம்.
ஆனால் பாலிவுட் செல்வதால் கதையைக் கூட கேட்காமல் இப்படத்தை கீர்த்தி நிராகரித்துவிட்டாராம்.