Thalaivar 168

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

டி.இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக யார் நடிப்பார் என எதிர்பாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனால், இவர் ஹீரோயினாக இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக அறிவிப்பில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கிறார் என்று தான் குறிப்பிட்டுள்ளனர்.

நாயகியாக மீனா அல்லது குஷ்பூ ஆகியோர் நடிக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.