Keerthy Shetty Rejects Dhanush Movie

வான்டட்டாக சென்று தனுஷ் வாய்ப்பு கொடுத்தும் அதனை வேண்டாம் என்று நாசுக்காக கூறியுள்ளார் இளம் நடிகை ஒருவர்.

Keerthy Shetty Rejects Dhanush Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அது மட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அப்படியான படங்களில் ஒன்றுதான் பியார் பிரேம காதல் பட இயக்குனர் இளன் இயக்கும் காதல் திரைப்படம்.

ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் ஒரே ஒரு படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்த கீர்த்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் எந்தவித பதிலையும் கூறாத காரணத்தினால் தனுஷ் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். என்னுடைய படத்தில் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பமா? கதை பிடித்து இருக்கா என்றெல்லாம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Live ஆக சிலம்பம் சுற்றி அசத்திய Vijay-யின் தங்கை – Viral Video | HD

ஆனால் கீர்த்தி ஷெட்டி பல படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் தருவதில் பிரச்சனை உள்ளது. எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் கால்சீட் தர முடிந்தால் கட்டாயம் நடிக்கிறேன் என நாசுக்காக பதிலைக் கூறி இந்த படத்தை நிராகரித்துள்ளார். ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டு இவ்வளவு சீனா?? தனுஷ் வான்டட் ஆக கேட்டும் நாசுக்காக நடிக்க முடியாது எனக் கூறிவிட்ட கீர்த்தி ஷெட்டியை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.