ரசிகர்களின் ஃபேவரைட் நடிகை கீர்த்தி ஷெட்டி விஜய் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

‘உப்பனா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் அடுத்ததாக ‘தி வாரியர்’ திரைப்படத்தில் நடித்து “புல்லட்டு பாடல்” மூலம் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தார்.

கீர்த்தி ஷெட்டியின் பதிலால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!!… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பதிவு!.

தற்போது சூர்யாவின் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் பிறமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி தற்பொழுது விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.

கீர்த்தி ஷெட்டியின் பதிலால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!!… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பதிவு!.

அதாவது நடிகை கீர்த்தி ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து இவரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு நடிகை கீர்த்தி ஷெட்டி அவர் ஒரு “இன்ஸ்பையரிங் சூப்பர்ஸ்டார் ” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார். ரசிகர்களின் ஃபேவரிட் நடிகை ஆன கீர்த்தி ஷெட்டி தளபதி விஜய் குறித்து சூப்பரான பதிலை அளித்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இப்பதிவு ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.