மகனிடம் போட்டோவுக்கு போஸ் கொடுக்குமாறு கெஞ்சி கூத்தாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் விஜய் சூர்யா தனுஷ் ரஜினி நடித்த நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள இவர் தெலுங்கிலும் மகேஷ்பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்துள்ளார்.

மகனிடம் கெஞ்சி கூத்தாடும் கீர்த்தி சுரேஷ்.. யார் அவன் தெரியுமா? வைரலாகும் வீடியோ

பல படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து போட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். நேற்று குழந்தைகள் தினம் என்பதால் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்லப்பிராணி நாய்க்குட்டியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மகனிடம் கெஞ்சி கூத்தாடும் கீர்த்தி சுரேஷ்.. யார் அவன் தெரியுமா? வைரலாகும் வீடியோ

அந்த வீடியோவில் இன்னைக்கு ஏதோ குழந்தைகள் தினமாம் ஒரே ஒரு போஸ் கொடுடா என கெஞ்ச அந்த நாய்க்குட்டி கண்டு கொள்ளாமல் படுத்து தூங்குகிறது. இந்த வீடியோவை தான் மை சன் என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.