அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Keerthi Suresh Salary for Annaththe Movie : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் அண்ணாத்த. விமர்சன ரீதியாக இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது.

உலகில் விண்வெளியில் வாக்கிங் சென்ற, முதல் வீராங்கனை..

இரண்டே நாளில் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இவருக்கும் ரஜினிக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு வேதாளம் படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே அடிதான் உனக்கு.., Anchor-ஆல் கடுப்பான KPY Dheena..! | Velavan Stores | Fun Shopping | T Nagar HD