மாநாடு படத்தை பாராட்டிய கீர்த்தி சுரேஷிற்கு சிம்பு நன்றி சொல்ல பதிலுக்கு கீர்த்தி சுரேஷ் பதிவு செய்த பதிவு தான் தற்போது டாப்பு டக்கராக வலம் வருகிறது.

Keerthi Suresh Reply to STR : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மூன்றே நாளில் படம் எதிர்பார்த்த வசூலை பெற்று தற்போது லாபத்தை குவித்து வருகிறது.

சிம்புவின் மாநாடு படத்தைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களை பாராட்டி பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ் படத்தை பாராட்டி சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

சக்தி எனப்படுவது யாதெனின்..

இந்த பதிவை பார்த்த நடிகர் சிம்பு கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார். இதற்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் ஒரே ஒரு ஹார்ட்டின் எமோஜியை தட்டி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் சிம்புவுக்கு லவ்வை சொல்லிட்டாங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

நான் முழு கதையும் கேட்கவே இல்ல – Interview With Actress Divya Bharathi & Bachelor Movie Team